நமது இந்த கல்விபாலம் தன்னார்வ அமைப்பானது 2005 ஆம் ஆண்டிலிருந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பின் நோக்கங்கள் கடைக்கோடியில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவசெல்வங்களுக்கு கல்வியை கொண்டு செல்லுதல் மற்றும் அரசுபொதுபோட்டிதேர்வில் வெற்றி பெற வழிகாட்டுதல் அதற்கு தேவையான தகவல் மற்றும் புத்தகங்களை டிஜிட்டல் வடிவமாக வழங்குதல், வேலைவாய்ப்பு தகவல்கள் வழங்கி,வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திதருதல், இலவச வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் கல்வி சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் வழங்கி சேவையாற்றுதல் ஆகியன ஆகும்.